« Back to word list

காம் (Ham)

இவன் நோவாவின் மூன்று குமாரரில் ஒருவன். ஜலப்பிரள யத்தின்பின், பூமியெங்கும் குடியேறின மூன்று ஜாதியாரில் ஒன்றுக்கு இவன் முற்பிதா (ஆதி. 10:1, 6--20). இந்தப் பெயரின் அர்த்தம் 'கருமை'. எகிப்து தேசத்தின் கருமையான நிலத்தினிமித்தம் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

நோவா வெறி கொண்டிருந்த காரியத்தில், காம் அவமதிப்பாய் நடந்து கொண்டதினிமித்தம் நோவா காமுடைய மகன் கானான், தன் சகோதரரிடம் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்று கூறினான். (ஆதி. 9:20-25).

எகிப்து தேசத்தில் தேவன் நடப்பித்த கிரியைகள் பின்வரும் சங்கீதங்களில் குறித்துள்ளன (சங். 78:51; 105:23,27; 106:21).

தேதோரில் பூர்வத்தில் காமின் சந்ததியார் குடியிருந்தார்கள் (1 நாளா.4:40).

கெதர்லாகோமேர், காமிலே இருந்த சூசிமியரை முறிய அடித்தான் (ஆதி. 14:5).

« Prev 210 / 564 Next »