« Back to word list

காய்பா (Caiaphas)

இவனொரு சதுசேயன். அன்னா என்பவனின் மருமகன் (யோவான் 18:13). அன்னாவின் பின், இவன் பிரதான ஆசாரியனா யிருந்தான் (கி.பி. 18-36).

பிலாத்து தேசாதிபதியாய் இருந்த காலம் முழுவதும், இவன் பிரதான ஆசாரியன். அன்னாவும் இவனோடுகூட ஆசாரியனாக இருந்ததாகத் தெரிகிறது (லூக்கா. 3:2). அன்னா பிரதிஸ்தனாயிருந்திருக்கலாம்.

இயேசுவைப் பிடித்து சிலுவையில் அறைந்த விஷயத்தில், இவன் முதல்வன் (மத். 26:3,4 யோவான் 11:49). பின்பு பேதுரு, யோவான் ஆகிய அப்போஸ்தலரைத் துன்புறுத்தினதற்கும் இவன் காரணமா யிருந்தான் (அப். 4:6).

இயேசு செய்த அற்புதங்களைப் பற்றித் தீர்மானம் செய்யக் கூடி வந்த ஆலோசனைச் சங்கத்தில், காய்பா தீர்க்கதரிசனமாய் “ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாய் இருக்குமென்று' சொன்னான் (யோவான். 11:49-52).

பின்பு அன்னா இயேசுவைக் கட்டுண்டவராகக் காய்பாவிடம் அனுப்பினான் (யோவான். 18:24).

காய்பா பிரதான ஆசாரியருடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் (அப். 4:5).

« Prev 213 / 564 Next »