காலேப் (Caleb)
(தைரியம்)
இவன் கேனேசியனாகிய எப்புன்னேயின் குமாரன் (எண். 32:11). கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்க யூதா கோத்திரத் தலைவனாக மோசே இவனை அனுப்பினான் (எண். 13:6). திரும்பி வந்தபோது இவனும், யோசுவாவும் மாத்திரமே அந்தத் தேசத்துக்கு போகலா மென்று சொன்னார்கள். அவர்களுக்கே அந்தத் தேசத்துக்குப் போகும் சிலாக்கியமும் கிடைத்தது (எண். 14:38; 32:11).
அந்த நல்ல தேசத்தைக் காலேப் மாத்திரம் காண்பான். நான் அதை அவனுக்கும், அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்னார் (உபா.1:36).
தேசத்தை ஜெயித்தப்பின், யோசுவா எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தான். அப்போது அவன் 85 வயதுள்ளவனாயிருந்தான் (யோசுவா. 14:6-15). காலேப் அங்கிருந்த ஏனாக்கின் குமாரரைத் துரத்திவிட்டான். அவன் தன் மகளை ஒத்னியேலுக்கு விவாகம் பண்ணிக் கொடுத்தான் (யோசுவா. 15:14-17).
யூதாவுக்கும் காலேபுக்கும் வேறு தேசங்களும் இருந்தன (1 சாமு.30:14).