கிபியோன் (Gibeon)
(உயர்வான இடம்)
இது ஏவியருடைய இராஜதானிப் பட்டணங்களில் ஒன்று (யோசுவா.9:7). எருசலேமிலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது. ஆயியைப் பார்க்கிலும் பெரிய பட்டணம். பலசாலிகள் உள்ள இடமாயுமிருந்தது (யோசுவா. 10:2).
எரிகோவுக்கும், ஆயிக்கும் சம்பவித்ததைக் கண்டு, கிபியோனிய குடிகள் யோசுவாவோடு சமாதானம் செய்து கொண்டார்கள் (யோசுவா.9:3-15).
அந்தப் பட்டணம், தொடக்கத்தில் பென்யமீனருக்குப் பங்கிடப் பட்டு, பின்பு லேவியருக்குக் கொடுக்கப்பட்டது (யோசுவா. 18:25; 21:17).
தாவீது யூதாவின் இராஜாவானபோது, இஸ்போசேத்தின் மனுஷரோடு கிபியோனில் நடந்த யுத்தத்தில் தாவீது ஜெயம் பெற்றான் (2 சாமு. 2:12-17). கிபியோனுக்கருகில் இருக்கிற பெரிய கல்லண்டையில், யோவாப், அமாசாவை ஒரே குத்தாகக் குத்திக் கொன்றான் (2 சாமு. 20:8).
தாவீது கிபியோனியாவிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்னிருக்கிற தகன பலி பீடத்தின் மேல் பலி செலுத்த ஆசாரியரை வைத்தான் (1 நாளா. 16:39, 40).
கிபியோனில் ஒரு பெரிய மேடை இருந்தது. சாலொமோன் அங்கே பலியிட்டபின், கர்த்தர் தரிசனத்தில் அவனோடு பேசினார்
(1 இரா. 3:4; 9:2;). (2 நாளா. 1:3).
யோகனான் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்தண்டையில் இஸ்மவேலைக் கண்டு, அவன் மிஸ்பாவிலிருந்து கூட்டிக் கொண்டு போன ஆள்களை விடுவித்தான் (எரே. 41:11-15).
செருபாபேலோடு சிறைபட்டுப்போன கிபியோனியரின் புத்திரரும் திரும்பி எருசலேமுக்கு வந்தார்கள் (நெகே. 7:25; 3:7).