« Back to word list

கிரேத்தா (Crete)

மத்தியத்தரைக் கடலிலுள்ள ஒரு தீவு.156 மைல் நீளமும், 7.30 மைல் வரை அகலமுமுள்ளது.

கிரேக்க தேசம் முன்னேறின காலத்தில் இதுவும் ஒரு விசேஷித்த இடமாயிற்று. பழைய ஏற்பாட்டில் "கப்கோர்" என்ற தேசம் இதைக் குறித்ததாக எண்ணப்படுகிறது (உபா. 21:22; ஆமோஸ் 9:7).

பவுல் ரோமாபுரிக்குக் கப்பலில் கொண்டு போகப்பட்டபோது, புயலினால் தடுக்கப்பட்டு, கிரேத்தா தீவின் ஒதுக்கில் தங்கினதாகக் குறித்துள்ளது (அப். 27:7).

பவுல் விடுதலையான பின், அங்கே போயிருக்கையில் தீத்துவை அங்கிருந்த சபையின் காரியங்களைப் பார்க்கும்படி ஏற்படுத்தினான் (தீத்து. 1:12-16).

கிரேத்தியர் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமிலிருந்தார்கள் (அப். 2:11).

கிரேத்தா தீவாருடைய தப்பிதமான நடக்கைகளைப் பவுல் கண்டிக்கிறான் (தீத்து. 1:12).

கிரேத்தியரைப் பற்றி 1 சாமு. 30:14; எசே. 25:16; செப். 2:5இல் குறித்துள்ளது.

« Prev 221 / 564 Next »