« Back to word list

கிறிஸ்தவன் (Christian)

இந்தச் சொல் புதிய ஏற்பாட்டில் மூன்று இடங்களில் காணப்படுகிறது (அப். 11:26; 26:28; 1 பேதுரு. 4:16. கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்துவைப் பின்பற்றுபவன்.

அந்தியோகியாவில் கிறிஸ்துவின் மார்க்கத்தாருக்கும் யூதமார்க் கத்தாருக்கும் வித்தியாசம் காட்டும்படி கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களும் அதை அங்கீகரித்தார்கள். பவுல் நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளி என்று யூதர் சொன்னார்கள் (அப். 24:5).

அகிரிப்பாவும், "நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங் குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்" என்று பவுலுக்குச் சொன்னான் (அப். 26:28)

துவக்கத்தில் கிறிஸ்து மார்க்கம் குறைவான நிலையிலுள்ள ஜனங்களுக்குள்ளேயே பரம்பினதினிமித்தம், "கிறிஸ்தவன்" என்பது ஒரு இழிவான சொல்லாக இருந்தது.

"கிறிஸ்தவன் என்ற பெயரினிமித்தம் ஒருவன் பாடுபட்டால், வெட்கப்படாமல், அந்தப் பெயரினிமித்தம் தேவனை மகிமைப் படுத்தக்கடவன்" என்று பேதுரு கூறுகிறான் (1 பேதுரு. 4:16),

"கிறிஸ்தவர்கள்" கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற வர்களாகும் (அப். 9:14; ரோமர். 10:12; 1 கொரி. 1:2).

துவக்கத்தில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் சீஷர் என்றெண்ணப் பட்டும், அப்போஸ்தலரின் நாள்களில், 'விசுவாசிகள்' (அப். 5:14),"பரிசுத்தவான்கள்” (அப். 9:13), "சகோதரர்" (அப். 6:3), "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்" (2 தீமோ. 2:10). "தேவனுடைய சபை” (அப். 20:28), "தேவனுடைய அடிமைகள்" (ரோம. 6:22) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

பெயர் எவ்விதமாயிருப்பினும், கிறிஸ்து உள்ளவனே, கிறிஸ்தவன் என்று சொல்லத்தகும் (கொலோ. 1:27).

« Prev 222 / 564 Next »