« Back to word list

கீசோன் (Kishon)

(வளைந்தோடும் ஆறு)

1. இது பலஸ்தீனாவிலுள்ள ஒரு பெயர் பெற்ற ஆறு. சமாரியாவிலுள்ள கில்போவா, தபோரா மலைகளுக்கு இடையில் உற்பத்தியாகி, யெஸ்ரயேல் சமவெளிக்கூடாய் 23 மைல் தூரம் ஓடி, மத்தியத் தரைக் கடலில் விழுகிறது.

கோடை காலத்தில் தண்ணீரில்லாதிருந்தாலும், மழை பெய்யும் வேளையில் கொந்தளிப்பான நீர்ப்பாய்ச்சலிருக்கும்.

சீரியருக்கும் இஸ்ரவேலருக்குமிடையில் நடந்த யுத்தத்தில், சிசெராவின் இரதங்களைக் கீசோனின் தண்ணீர் வாரிக்கொண்டு போயிற்று (நியா.4:7; 5:21).

கீசோன் என்னும் ஆற்றண்டை சிசெரா, யாபீன் என்பவர் களுக்குச் செய்தது போலச் செய்யும் என்று சங்கீதக்காரன் கூறுகிறான் (சங். 83:9,10).

இங்கே எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை வெட்டிக் கொன்றான் (1 இரா.18:40).

2. இந்தப் பெயருள்ள பட்டணம் யோசுவா. 21:28இல் குறித்துள்ளது. 1 நாளா. 6:72லும் காணப்படுகிறது.

« Prev 229 / 564 Next »