« Back to word list

கீதரோன் (Kidron)

பிற்காலங்களில் இது யோசபாத்தின் பள்ளத்தாக்கு எனப்பட்டது.

அப்சலோமுக்குத் தப்பி, தாவீது இராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான் என்பதே இதைப்பற்றி முதன் முதலாக வேதாகமத்தில் சொல்லியுள்ளது (2 சாமு. 15:23).

ஆசா தன் தாயின் விக்கிரகங்களைக் கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான் (1 இரா. 15:13; 2 நாளா. 15:16).

எசேக்கியாவின் நாள்களில் ஆலயத்தில் கண்ட அசுத்தத்தைக், கீதரோன் ஆற்றுக்குக் கொண்டுபோனார்கள் (2 நாளா. 29:16).

ஜனங்கள், எருசலேமில் உண்டான பலிபீடங்களைக் கீதரோன் ஆற்றில் போட்டார்கள் (2 நாளா. 30:14).

யோசியா தோப்பு விக்கிரகங்களைக் கீதரோன் ஆற்றில் சுட்டெரித்தான் (2 இரா. 23:6).

இந்த இடம் "பள்ளத்தாக்கு" என்று இரண்டு இடங்களில் குறித்துள்ளது (2 நாளா. 33:14; நெகே. 2:15).

கீதரோன் வாய்க்கால் பரிசுத்தமாயிருக்கும் என்று எரேமியா சொல்லுகிறான் (எரே. 31:40).

இதற்கிணங்க இயேசுவும் சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார் (யோவான். 18:1).

எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட பள்ளத்தாக்கும் இதுவாயிருக்கலாம் (எசே. அதி. 27).

கீதரோன் சிற்றாறு (Kidron)

மூன்று மைல் நீளமுள்ள ஒரு சிற்றாறு. எருசலேம் அலங்கத்துக் கும், ஒலிவ மலைக்குமிடையிலுள்ளது. இது கடலில் முடிகிறது. இதில் எப்போதும் தண்ணீரிருக்கிறதில்லை. மழை காலத்தில் தண்ணீர் பாயும். இரு பக்கமும் செங்குத்தான கரைகளுள்ளது.

« Prev 230 / 564 Next »