« Back to word list

கீலேயாத்தியர் (Gileadites)

கீலேயாத் தேசத்தில் குடியிருந்தவர்கள் கீலேயாத்தியரெனப் பட்டார்கள் (நியா. 12:4). மனாசேயின் பேரன் கிலெயாத். அவனுடைய சந்ததியார் கீலேயாத்தியர் (எண். 26:29).

வேதாகமத்தில் சொல்லப்பட்ட பெயர் பெற்ற கீலேயாத்தியர்: யாவீர், யெப்தா, பர்சிலா என்பவர்கள் (2 சாமு. 17:27).

கீலேயாத்தின் பிசின் தைலம் (Balm of gilead)

இது கீலேயாத் தேசத்திலுள்ள ஒரு ஜாதி மரத்திலிருந்து எடுக்கப்படுகிற பிசின். ஒளஷதத்துக்கடுத்த தைலமாகவும், அழகுப் பொருளாகவும் அது உபயோகிக்கப்பட்டது (ஆதி. 37:25; எரே. 8:22; 46:11; 51:8).

இஸ்மவேலர் கீலேயாத்திலிருந்த பிசின் தைலம் - ஆகியவைகளில் வியாபாரம் செய்தார்கள் (ஆதி. 37:25).

யாக்கோபு கொஞ்சம் பிசின் தைலமும் தேனும் யோசேப்புக்கு வெகுமதியாக அனுப்பினான் (ஆதி. 43:11).

கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? (எரே. 8:22). எகிப்தின் குமாரத்தியே நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு (எரே. 46:11). பாபிலோனின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள் (எரே. 5:8).

« Prev 232 / 564 Next »