கீரியாத் அர்பா (Kirjath Arba)
எபிரோனின் முதற் பெயர் கீரியாத் அர்பா (நியா. 1:10). இங்கே சாராள் மரித்தாள் (ஆதி. 23:2). அர்பா என்பவன் ஏனாக்கியருக் குள்ளே பெரியவன் (யோசுவா. 14:15). இது யூதாவில் மலைத் தேசத்திலுள்ள ஒரு அடைக்கலப் பட்டணம் (யோசுவா. 20:7).
சிறையிருப்பிலிருந்துத் திரும்பி வந்த யூதாவின் புத்திரரில் சிலர் இங்கே குடியேறினார்கள் (நெகே. 11:25).