கெதலியா (Gedaliah)
(கர்த்தர் பெரியவர்)
1. இவன் எரேமியாவின் சிநேகிதனாகிய அகீக்காமின் மகன். பாபிலோன் இராஜாவாகிய நேபுகாத்நேச்சார், எருசலேமை அழித்துப்போட்டு, ஜனங்களைச் சிறை பிடித்துக்கொண்டு போன பின், மீதியாயிருந்த ஏழை ஜனங்களை பாதுகாக்கும்படியாக, கெதலியாவை அதிகாரியாக வைத்தான் (2 இரா. 25:22; எரே. 33:5). கெதலியா மிஸ்பாவில் குடியிருந்தான். பாபிலோன் இராஜாவின் பிரபுக்கள் எரேமியாவை அவனிடம் ஒப்புவித்தார்கள் (எரே. 39:14).
ஆனால் அம்மோன் இராஜாவாகிய பாலிஸ், கெதலியாவை கொன்றுபோட யோசித்து, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை, அவனிடம் அனுப்பி வைத்தான். கரேயாவின் குமாரனாகிய யோகனான் இந்தக் காரியத்தை கெதலியாவுக்குச் சொன்னபோதிலும், அவன் அதை நம்பவில்லை (எரே. 40:13-16).
பின்பு இஸ்மவேல் பத்து மனுஷரோடு கூடப்போய் கெதலியாவை யும் அவனோடிருந்த யூதரையும் கல்தேயரையும் வெட்டிக் கொன்று போட்டான் (2 இரா. 25:25). கெதலியாவின் சதிக் கொலையை நினைவுகூறும்படி, யூதர் ஏழாம் மாதத்தில் உபவாசம் பண்ணினார்கள் (சக. 7:5; 8:19).
2. எதுத்தூனின் குமாரனாகிய கெதலியா, வாத்தியங்களால் தீர்க்க தரிசனம் சொல்லும் கூட்டத்தாரின் தலைவன் (1 நாளா. 25:3, 9).
3. மறுஜாதி மனைவிகளைத் தள்ளிவிட்ட ஆசாரியரிலொருவன் (எஸ்றா. 10:18).
4. பஸ்கூரின் குமாரன் கெதலியா. எரேமியாவைத் துரவில் போட்டவன் (எரே. 38:1, 4-6).
5. கெதலியாவின் குமாரனாகிய கூஷின் குமாரன் செப்பனியா(செப். 1:1).