« Back to word list

கெத்செமனே (Gethsamene)

இதின் அர்த்தம் ஆலை. "ஊற்று மரம்”. நமது ஆண்டவர் தீவிர வேதனைப்பட்ட தோட்டமிருந்த ஒரு துண்டு நிலம். இந்தத் தோட்டம் ஒலிவ மலைக்கு மேற்பக்கத்திலிருந்தது (மத், 26:36; மாற்கு. 14:32).

எருசலேம் அலங்கத்திலிருந்து கால் மைல் தூரத்திலும், கெதரோன் ஆற்றிலிருந்து ஐம்பது கெஜத்துக்கு அப்பாலும் உள்ளது. இப்போதும் அங்கே எட்டு உயரமான ஒலிவ மரங்களிருக்கிறதாம். இவைகள் அக்காலத்தில் இருந்தவைகளென அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் கி.பி. 70-இல் தீத்து என்பவன் அவ்விடத்திலுள்ள எல்லா ஒலிவ மரங்களையும் வெட்டினானென யோசீபஸ் (Josephus) சொல்லுகிறான்.

பிரான்சிஸ்கஸ் (Franciscus) கூட்டத்தார் எரிகோவுக்கு போகும் பாதையருகே பழைய ஒலிவ மரங்களுள்ள ஒரு தோட்டத்தை கெத்செமனே என்று எண்ணி அதைப் பாதுகாத்து வருகிறார்களாம்.

கிரேக்க சபையார் வேறொரு இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டு கிறார்களாம்.

இன்னும் கல்லெறி தூரத்திலுள்ள ஒரு குகைக்கு "வியாகுல குகை"என்று பேரிட்டு அதுவே அவர் வேதனைப்பட்ட இடமென, வேறு சிலர் கூறுகிறார்களாம்.

« Prev 235 / 564 Next »