கேயாசி (Gehazi)
(இது தரிசனப் பள்ளத்தாக்கு எனப்படும்) இவன் எலிசாவின் வேலைக்காரன் என்றும், பணிவிடைக் காரனென்றும் குறித்துள்ளது (2 இரா. 4:12, 43).
சூனேமியாளுக்குப் பிள்ளை இல்லாததைப் பற்றி இவன் எலிசாவுக்கு அறிவித்தான். பின்பு ஒரு பிள்ளை பிறந்தது. அது மரித்தபோது, எலிசாவின் சொற்படி இவன் பிள்ளையை உயிர்ப்பிக்க முயன்றும் இயலாமற்போனபோது, எலிசா உயிர்வரச் செய்தான் (2இரா. 4:8-37).
குஷ்டரோகியான நாகமான் எலிசாவின் சொற்படி சொஸ்த மடைந்த சமயத்தில் அவனிடம் வெகுமதியை எலிசா ஏற்றுக் கொள்ளாததைக் கண்ட கேயாசி எலிசா அறியாமல் தான் அதைப் பெற்றுக்கொண்டான். இந்தப் பொருளாசையினிமித்தம், எலிசா நாகமானின் குஷ்டரோகம் அவனையும் அவன் சந்ததியாரையும் என்றென்றைக்கும் பிடிக்கும் என்றான் (2 இரா. 5:20-27).
பின்பு சூனேமியாள் தன் வயலைப்பற்றி யோராம் இராஜாவிடம் முறையிட்ட வேளையில் கேயாசி அவனுக்கு நடந்த உண்மையைச் சொல்லவே, இராஜா அவளுக்கு அந்த வயல் கிடைக்கும்படிச் செய்தான் (2 இரா. 8:4-6).