« Back to word list

கேபா (Geba)

(கன்று)

பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பட்டணம் (யோசுவா. அதி. 18:24). இங்கே 'காபா' என்று குறித்துள்ளது. (யோசுவா, 21:27: 1நாளா. 6:60). இது யூதா இராஜ்யத்தின் வட எல்லையா யிருந்ததினால் “கேபா முதல் பெயர்செபா மட்டும்” என்ற பேச்சு வந்தது (2 இரா. 23:8). யோனத்தானும் ஆயுததாரியும் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போன பாதையிலிருந்த கற்பாறை ஒன்று கேபாவுக்கு எதிராக இருந்தது (1 சாமு. 14:4-14),

ராமாவில் பாஷா கட்டின கற்களையும், மரங்களையும் ஆசா எடுத்து கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான் (1 இரா. 15:22). சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப் பட்டணத்தில் குடியேறினார்கள் (எஸ்றா. 2:26; நெகே. 11:31).

இந்த இடத்தில் இப்போது "ஷீபா" என்ற ஒரு பட்டணம் கட்டப்பட்டிருக்கிறதாகச் சொல்லுகிறார்கள்.

« Prev 239 / 564 Next »