« Back to word list

கொர்நேலியு (Cornelius)

இவன் செசரியாவிலிருந்த ரோம பட்டணத்தின் நூற்றுக்கதிபதி. புறஜாதியானாயிருந்தும் ஒரே தேவனை வணங்கின பயபக்தியுள்ளவன்.

ஒரு தேவதூதன் அவனுக்குத் தரிசனமாகி, யோப்பா பட்டணத்திலிருந்துப் பேதுருவை அழைக்கும்படி சொன்னபோது, அவனிடம் ஆள் அனுப்பினான். பேதுருவும் தரிசனம் கண்டு, அவனைக் கூட்டிக்கொண்டு போகவந்த ஆள்களுடன் கொர்நேலியுவின் வீட்டுக்குப் போய் அவனும் அவனுடைய சிநேகிதரும், உறவின் முறையாரும் தனக்காகக் காத்திருந்ததைக் கண்டான். அவன் அவர்களுக்கு வசனத்தை கூறின வேளையில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேலிறங்கினார். அப்போது பேதுரு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் (அப். 10:1-48).

கொர்நேலியுவும் அவன் வீட்டாருமே, புறஜாதியாரில் முதன் முதலாக கிறிஸ்தவர்களானார்களென்று எண்ணப்படுகிறது. பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்த எத்தியோப்பிய மந்திரி இதற்கு முந்தினவனாயிருக்கலாம் (அப். 8:35-39).

« Prev 243 / 564 Next »