« Back to word list

கொர்பான் (Corban)

இந்தச் சொல் மாற்கு 7:11இல் மாத்திரம் காணப்படுகிறது. "காணிக்கை” என்று மத். 15:5இல் எழுதியுள்ளது.

தொடக்கத்தில் தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கையை இது கருதிற்று. கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணினால் அதைச் செலுத்த வேண்டுமென்று மோசேயின் பிரமாணத்தில் சொல்லியுள்ளது (உபா. 23:21-23). பழிக்கஞ்சாத சில மனுஷர் தங்கள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல், அந்தப் பொருள் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுத்தாயிற்றென்பார்கள். யூத தலைவரும் அப்படிப்பட்ட கொர்பான் காணிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். பரிசேயரும் அதற்கு அனுமதி கொடுத்தார்கள். நமது ஆண்டவர் இந்தப் போதனையினிமித்தம் பரிசேயரைக் கண்டித்தார்.

அவர்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்கு கிறார்களென்றார் (மாற்கு. 7:13).

« Prev 244 / 564 Next »