« Back to word list

கொல்கொதா (Golgotha)

(தலை ஓடு

கொல்கொதா என்பதின் பொருள் "தலை ஓடு"

எருசலேமுக்குப் புறம்பே இயேசு சிலுவையிலறையப்பட்ட இடம். இது கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும். "கொல்கொதா" என்று மத். 27:33; மாற்கு. 15:22; யோவான். 19:17லும் கபாலஸ்தலம் என்று லூக்கா. 23:33லும் குறித்துள்ளது.

இப்பெயர் கொடுக்கப்பட்ட நியாயம், ஒன்றில் இது ஒரு கபாலத் தோற்றமான மேடு, அல்லது அநேக தலையோடுகள் கிடந்த இடமாயிருக்கலாம். பின்பு இந்த அடையாளங்கள் அங்கே காணப்படவில்லை.

பரிசுத்த கல்லறைத் தேவாலயம் (Church of Holy Sepulchre) ஒன்று அவ்விடத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அக்காலத்து யூத ஜனங்கள் கி.பி. 130இல் செய்த கலகத்தின் பயனாய், யூதரும், யூத கிறிஸ்தவர்களும் எருசலேமிலிருந்து துரத்தப் பட்டார்கள். அதன்பின் அஞ்ஞான இராஜ்யங்கள் வன்மங்கொண்டு. இந்தப் பரிசுத்த இடங்களை அழித்துப் போட்டார்கள்.

« Prev 246 / 564 Next »