சாதோக் (Zadok)
(நீதியுள்ள)
1. இவன் ஆரோனின் சந்ததியான். அகித்துப்பின் மகன் (1 நாளா. 6:5-13). தாவீதின் நாள்களில் இவனும், அபியத்தாரின் குமாரன் அகிமலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள் (2 சாமு. 8:17).
தாவீது அப்சலோமுக்கு தப்பி ஓடினபோது சாதோக்கும் அபியத்தாரும் கர்த்தருடைய பெட்டியோடு அவனிடம் போக, அவன் அவர்களைத் திருப்பி எருசலேமுக்கு அனுப்பினான் (2 சாமு.15:24-36).
அப்சலோம் மரித்த பின், இவர்கள் இருவரும் தாவீதுக்கு இராஜ்யத்தை நிலைநிறுத்த உதவியாயிருந்தார்கள். (2 சாமு. 19:11). தாவீது ஆயத்தப்படுத்தின இடத்தில் தேவனுடைய பெட்டியைக் கொண்டு வந்து வைக்க சாதோக்கும் உதவியாயிருந்தான் (1 நாளா.15:11).
தாவீதின் கடைசி நாள்களில், அதோனியா இராஜாவாக முயன்றும், தாவீதின் கட்டளைப்படி, சாதோக்கும் நாத்தானும் சாலொமோனைச் சீகோனுக்குக் கொண்டுபோய் இராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் (1 இரா. 1:30-39).
சாலொமோன் இராஜா ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்தில் வைத்தான் (1 இரா. 2:35). சாதோக்கும் அவன் சந்ததியாரும் கி.மு. 587இல் சாலொமோனின் தேவாலயம் அழிந்துபோகும் வரை, ஆசாரிய ஊழியம் செய்தார்கள். எசேக்கியேல் சாதோக்கின் சந்ததியே உண்மையான ஆசாரியரென்று கூறுகிறான் (எசே. 44:15, 48:11).
2. உசியா இராஜாவின் மாமனும் யோதாம் இராஜாவின் பாட்டனுமான சாதோக் (2 இரா. 15:33; 2 நாளா. 27:1).
3. நெகேமியாவின் கீழ் அலங்கத்தைக் கட்டினவன் (நெகே. 3:4).
4. அகித்தூபின் மகனாகிய சாதோக் ஓர் ஆசாரியன் (1 நாளா. 6:12; நெகே. 11:11).
5. இம்மேரின் குமாரன் சாதோக், அலங்கத்தைப் பழுது பார்த்த ஓர் ஆசாரியன். (நெகே. 3:29).
6. வேதபாரகனாகிய சாதோக், ஆலயத்தில் பொக்கிஷக்காரன் (நெகே.13:13).
7. எபிரோனில் தாவீதிடம் போன ஒரு வாலிபன் (1 நாளா. 12:28).