சிதேக்கியா (Zedekiah)
சிதேக்கியா என்பதன் பொருள் "கர்த்தருடைய நீதி". இவன் யூதாவின் கடைசி இராஜா. யோசியாவின் மூன்று குமாரரில் இளையவன். நேபுகாத்நேச்சார் யோயாக்கீனை விலக்கிப் போட்டு இவனை இராஜாவாக ஏற்படுத்தி (கி.மு. 597). அவனுடைய மத்தனியா என்ற பேரை, சிதேக்கியாவென்று மாற்றினான் (2 இரா. 24:15-17).
இவன் துர்ஆலோசனைக்காரருடைய யோசனையை கேட்டு, பாபிலோனிய இராஜாவுக்கு விரோதமாய் கலகம்பண்ணினான்.
இதினிமித்தம் நேபுகாத்நேச்சார் தன் சேனைகளோடு எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கி.மு. 686இல் அதைக் கீழ்ப்படுத்தினான். சிதேக்கியா இரவிலே தப்பி ஓடினபோது, எரிகோ சமவெளியில் பிடிபட்டு, நேபுகாத்நேச்சாரிடம் கொண்டு வரப்பட்டான். அங்கே அவனுடைய கண் முன்னே அவனுடைய குமாரரைக் கொன்றபின், அவனையும் குருடாக்கி, விலங்குப்போட்டு பாபிலோனுக்கு அனுப்பினான் (2 இரா. 25:1-7; எரே. 39:1-7).
சிதேக்கியா எரேமியாவிடம் ஆலோசனை கேட்டும், அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ளாதிருந்தான். இதினிமித்தம் அவன் துரவில் போடப்பட்டபோதும், இராஜா கவனிக்கவில்லை (எரே. 38:1-13).
சிதேக்கியா கர்த்தரால் அபிஷேகம் பெற்றவன் அல்ல, நேபுகாத் நேச்சார் ஏற்படுத்திய இராஜா (எரே. 37:1), எசேக்கியேல் இவன் இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதி என்கிறான் (எசே. 12:10; 21:25).
2. ஆகாப் இராஜாவின் கள்ளத் தீர்க்கதரிசிகளின் தலைவன் (1 இரா. 22:11; 2 நாளா. 18:10).
3. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனவர்களுக்குள் இருந்த கள்ளத்தீர்க்கதரிசியாகிய இவன் அக்கினியால் சுடப்பட்டான் (எரே.29:21,22).
4. யோயாக்கீமின் நாள்களிலிருந்த ஓர் அதிபதி (எரே. 36:12).
5. யோயாக்கீமின் குமாரன் சிதேக்கியா (1 நாளா. 3:16).