« Back to word list

சிப்போராள் (Zipporah)

(சிறு பறவை)

மீதியான் ஆசாரியனாகிய எத்திரோவின் மகள், மோசேயின் மனைவி. இவளுக்கு கெர்சோம், எலியேசர் என்று இரண்டு புத்திரர் இருந்தார்கள் (யாத். 2:21,22; 18:4).

மோசே தன் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்க எகிப்துக்குப் போனபோது இவளும் கூடப் போனாள். போகிற வழியிலே கர்த்தர் கெர்சோமுக்கு விருத்தசேதனம் செய்யாததினால், மோசேயைக் கொல்லப் போனதினிமித்தம் சிப்போராள் தானே கெர்சோமுக்கு விருத்தசேதனம் செய்தாள் (யாத். 4:18-26.

பின்பு அவள் பிள்ளைகளோடுகூடத் தன் தகப்பனிடம் போனாள். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டதை எத்திரோ கேள்விப்பட்டு சிப்போராளையும் அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு ரெவிதீமில் இஸ்ரவேலர் பாளயமிறங்கியிருந்த இடத்துக்கு வந்தார்கள் (யாத். 18:1-6).

« Prev 272 / 564 Next »