« Back to word list

சிமிர்னா (Smyrna)

(வெள்ளைப்போளம்)

இது சின்ன ஆசியாவிலுள்ள ஒரு பூர்வீகப் பட்டணம். கி.மு. 1000க்கு முன் கிரேக்கருக்குச் சேர்ந்திருந்தது. கி.மு. 600இல் முற்றாய் அழிக்கப்பட்டுத் திரும்பவும் 200 வருடங்களின் பின் கட்டப்பட்டது.

ரோமருடைய காலத்தில் இது ஒரு முக்கிய துறைமுகம். இங்கு அநேக வித்தியாசாலைகளும் இருந்தன.

கி.பி. 23இல் திபேரியுராயன் பேரில், இங்கு ஒரு பெரிய கோயில் கட்டப்பட்டது. கிறிஸ்தவருடைய சபையும் உருவாகியது. வெளிப்படுத்தினவிசேஷத்தில் சொல்லப்பட்டுள்ள ஏழு சபைகளுள், இதுவும் ஒன்று (வெளி. 2:8-11). அங்கே இருந்த யூதர், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக எழும்பி, பொலிக்காப் என்னும் அத்தியட்ச குருவைச் சுட்டெரித்தார்கள். இது கி.பி. 169இல் நடந்தது.

பிற்காலங்களில் இந்தப் பட்டணம் துருக்கியருடைய ஆதிக்கத்துக்குட்பட்டது.

« Prev 274 / 564 Next »