« Back to word list

சிமியோன் (Simeon)

(கேட்குதல்)

சிமியோன் கோத்திரப் பிதாக்களில் ஒருவன். யாக்கோபு, லேயாள் என்பவர்களின் இரண்டாம் மகன் (ஆதி. 29:33). லேவியும் இவனும் தீனாளுடைய உடன் பிறந்த சகோதரர் (ஆதி. 34:25). சீகேம் தீனாளைத் தீட்டுப்படுத்தினதினிமித்தம், சிமியோனும் லேவியும் சிமேயையும், அவன் வீட்டாரையும் கொன்று போட்டு பட்டணத் தையும் கொள்ளையடித்தார்கள் (ஆதி. 34:26-30).

யாக்கோபின் புத்திரர் தானியம் கொண்டு வரும்படி, எகிப்துக்குப் போனவேளையில், யோசேப்பு இவனைப் பென்யமீனுக்குப் பிணையாளியாக வைத்துக் கொண்டான் (ஆதி. 42:24-36).

யாக்கோபு இறக்கும் நேரத்தில், கூறிய ஆசீர்வாதத்தில், சிமியோன்,லேவி என்பவர்களின் கோபக்குணத்தைக் கண்டித்து, இஸ்ரவேலிலே அவர்கள் சிதறப்படுவார்களென்றும் சொன்னான் (ஆதி. 49:5-7).

சிமியோனின் குமாரர் எழுவேல், யாமின், ஓகாத், யாகீன் சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள் (ஆதி. 46:10).

மோசேயின் ஆசிர்வாதத்தில் சிமியோனுடைய பேர் சொல்லப்படவில்லை (உபா. அதி. 33).

சிமியோன் கோத்திரம்

இந்தக் கோத்திரத்தின் ஜனத்தொகையும் அவர்களுடைய செல்வாக்கும் வரவரக் குறைந்து போயிற்று. சீனாயில் ஜனத் தொகை எடுத்தபோது, இக்கோத்திரத்தில் யுத்தத்துக்குப் போகத்தக்கவர்கள் 59,300 பேர் இருந்தார்கள். மோவாபில் எடுக்கையில் 22,200 பேர் மட்டும் இருந்தார்கள் (எண். 1:23; 26:14).

ஆசீர்வாதம் கூறும்படி, கெர்சீம் மலைமேல் நினறவர்களில், சிமியோன் கோத்திரத்தாரும் சேர்ந்திருந்தார்கள் (உபா. 27:12).

நியாயாதிபதிகளின் புத்தகத்தில் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைப்பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. தெபொராள் பாடின பாட்டிலும் இந்தக் கோத்திரத்தைப்பற்றிக் குறிக்கவில்லை (நியா. 5 அதி). பின்பு இந்தக் கோத்திரம், யூதா கோத்திரத்துக்குட்பட்டது. இவர்கள் யூதாவின் தென் மேற்குப் பகுதிகளில் வாசமாயிருந்தார்கள் (யோசுவா. 19:9). இவர்களுடைய பட்டணங்கள் யூதாவுக் குட்பட்டதாகத் தெரிகிறது (யோசுவா. 15:26-32; 1 இரா. 19:3; நெகே. 11:26-29).

வெளிப்படுத்தின விசேஷத்தில் இவர்களும் முத்திரை போடப் பட்டார்களென குறித்துள்ளது (வெளி. 7:7).

2. இயேசுவின் குடும்பத்தின் முற்பிதாக்களில் ஒருவன் (லூக்கா.3:30).

3. எருசலேமிலிருந்த ஒரு பக்திமான். இயேசு ஒரு பிள்ளையாக தேவாலயத்துக்குக் கொண்டு போகப்பட்டபோது இவன் அவரைக் கையில் எடுத்து தேவனை ஸ்தோத்தரித்து மேசியாவைக் காணுமட்டும் தான் மரிப்பதில்லையென்று, ஆவியானவர் தனக்கு வெளிப் படுத்தினதாகச் சொன்னான் (லூக்கா.2:25-35).

4. அந்தியோகியாவிலிருந்த ஒரு தீர்க்கதரிசி (அப். 13:1).

5. அப்போஸ்தலனாகிய பேதுரு (அப். 15:14).

« Prev 273 / 564 Next »