« Back to word list

சீகோன் (Sihon)

(தைரியம்)

இவன் எமோரிய தேசத்து இராஜா. எஸ்போன் அவனுடைய தலைப்பட்டணம். இவன் மோவாபியரைத் தோற்கடித்து. அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றினான். அவனுடைய தேசம் அர்னோன் தொடங்கி, யாப்போக்கு வரையும் யோர்தான் தொடங்கி வனாந்தரம் வரையும் இருந்தபடியால், மோசே ஸ்தானாதிபதிகளை அனுப்பி அவனுடைய தேசத்துக்கூடாகப் போக உத்தரவு கேட்டான். அவன் உத்தரவு கொடாமல், இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணினான். அவர்கள் அவனைத் தோற்கடித்து, அவனுடைய தேசத்தில் குடியேறி னார்கள் (எண். 21:20-26; உபா. 2:26-36; நியா. 11:19-22). இந்தத் தேசம் பிற்பாடு ரூபன், காத் கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது (எண். 32:1-41; யோசுவா. 13:10).

சீகோனின் மேல் பெற்ற வெற்றியைப் பற்றி, இஸ்ரவேலின் சரித்திரத்தில், பல தடவைகளில் குறித்துள்ளது. மோசே உபா. 31:4லும் ராகாப் யோசுவா. 2:10லும் கிபியோனியர், யோசுவா. 9:10லும் யெப்தா நியா. 11:19லும் லேவியர். நெகே. 9:22லும் இதைக் குறித்துப் பேசினார்கள். சங்கீத புத்தகத்திலும் இவனைப் பற்றிக் குறித்துள் ளது (சங். 135:11-13; 60:89).

« Prev 279 / 564 Next »