« Back to word list

சீதோன் (Zidon)

(கோட்டை)

இது தீரு பட்டணத்துக்கு 20 மைல் வடக்கேயுள்ள ஓர் பெனிக்கியரின் துறைமுகம். ஆசேர், செபுலோன் நாடுகளுக்கு வட எல்லை (ஆதி. 49:13; யோசுவா. 19:26; நியா.1:31).

கி.மு. 701இல் சனகெரிப், சீதோன் பட்டணத்துக்கு விரோதமாய்ப் போய், அதைப் பிடித்தான் (ஏசாயா. 23:1-12). அசீரியா குன்றிப் போனபோது, சீதோன் மறுபடியும் சுயாதீனம் பெற்றது. ஆனால் கி.மு. 587இல் நேபுகாத்நேச்சார், எரேமியா முன்னுரைத்தபடி, அதை முற்றுகை போட்டுப் பிடித்தான். கி.மு. 333இல், இது மகா அலெக்சாந்தரின் ஆதிக்கத்துக்குள்ளாயிற்று. பின்பு கி.மு. 64இல் ரோமர் அதைக் கைப்பற்றினார்கள்.

ஆகாப் விவாகம்பண்ணின யேசபேல், சீதோனியரின் இராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி (1 இரா. 16:31). இரண்டாம் தேவாலயம் கட்டுவதற்கு சீதோனியரும் கேதுரு மரங்களைக் கொடுத் தார்கள் (எஸ்றா. 3:7). தீர்க்கதரிசிகள் பல முறைகளில் சீதோன் மேல் வரப்போகிற தேவ தீர்ப்பைக் கூறியுள்ளார்கள் (ஏசாயா. 23:12; எரே. 27:3-6; எசே. 28:21,22; யோவான் 3:4-6). சீதோனியரும் இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்டார்கள் (மத். 15:21; மாற்கு. 3:8). அவர் சீதோன் பட்டணத்து அருகே ஒரு வீட்டில், சிரோபேனிக்கியா ஸ்திரீயின் மகளைப் பிடித்திருந்த பிசாசை நீக்கி விட்டார் (மாற்கு. 7:24-30).

ஏரோது-அகிரிப்பா என்பவன் சீதோனிலிருந்து அவனைக் காண வந்தவர்களுக்கு சிங்காசனத்தின் மேலிருந்து பிரசங்கம் பண்ணினான் (அப்.12:20). பவுலும் ரோமாபுரிக்குப் போக பிரயாணத்தில் சீதோன் துறையில் தங்கினபோது, தன் சிநேகிதரிடம் போய் இளைப் பாறுதலடைய உத்தரவு பெற்றான் (அப். 27:3).

« Prev 280 / 564 Next »