« Back to word list

சீன் (Sin)

(கோட்டை)

இது எகிப்தின் எல்லையிலுள்ள ஒரு காவல் கோட்டை. போர்ட் செட் (Portsaid) என்னும் துறைமுகத்திலிருந்து 20 மைலுக்கப்பால் இருந்தது. தற்காலத்தில் "தெல்பராம்" என்று சொல்லப்படுகிறது. எசே.30:15,16இல் இந்த இடத்திற்கு விரோதமாகத் தீர்ப்பு சொல்லியுள்ளது. பெலுஜியம் (Pelugeum) என்றும் குறித்துள்ளது.

சீன் வனாந்தரம் (Wilderness of Sin)

இது ஏலிம் என்ற இடத்திற்கும், சீனாய்க்கும் நடுவே இருந்தது (யாத். 16:1). இஸ்ரவேலர் சீன் வனாந்தரத்திலிருந்துப் புறப்பட்டு, ரெவிதீமில் பாளயமிறங்கினார்கள் (யாத். 16:1). மன்னா முதன் முதல் இங்கே கொடுக்கப்பட்டது (யாத். 16:15).

« Prev 282 / 564 Next »