« Back to word list

சீபா (Ziba)

(தாவரம்)

சவுல் இராஜாவின் ஊழியக்காரன். இவன் யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தைத் தாவீதிடம் அழைத்து வந்தான். தாவீது அவனைத் தன் அரண்மனையில் இருக்கும்படி சொல்லி, அவனுடைய நிலங்களைப் பயிரிடும்படி சீபாவுக்கும் அவன் குமாரருக்கும் ஒப்புக்கொடுத்தான் (2 சாமு. 9:11).

பின்பு தாவீது அப்சலோமின் கலகத்தினிமித்தம் எருசலேமை விட்டுப் போகையில், சீபா வெகுமதிகள் எடுத்துக்கொண்டு தாவீதுக்குக் கொடுத்து, மேவிபோசேத்தின் மேல் வீண்பழி சொன்னான். தாவீது அப்பொழுது மேவிபோசேத்தின் நிலங்களை அவனுக்குக் கொடுத்தான் (2 சாமு. 16:1-4). தாவீது திரும்பி வந்தபின், மேவிபோசேத் நடந்த உண்மையை அவனுக்குச் சொன்னபொழுது, தாவீது நிலத்தை இருவரும் பங்கிட்டுக்கொள்ளும்படி கற்பித்தான் (2 சாமு.19:17-29).

« Prev 283 / 564 Next »