« Back to word list

சீயோன் (Zion)

(சூரிய மலை)

இது எருசலேமிலுள்ள குன்றுகளில் ஒன்று. கெதரோன் பள்ளத் தாக்குக்கு மேற்குப் பக்கமாயும், தேவாலயத்தின் தெற்குப் பக்கமாயும் இருந்தது.

எபூசியரின் பூர்வீகக்கோட்டை இந்த மலையிலிருந்தது. தாவீது அதைப் பிடித்தபின் அது தாவீதின் நகரமாயிற்று (2 சாமு. 5.7; 1 நாளா. 11:5).

பின்பு, தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து, தாவீதின் நகரத்துக்குக் கொண்டு வந்தான் (2 சாமு.6:12).

சாலொமோன் தேவாலயத்தை இதற்கு அடுத்த மலைமேல் கட்டினபின் கர்த்தரின் பெட்டியைக் கொண்டு வந்து, சந்நிதி ஸ்தலமாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைத்தான் (1 இரா. 8:6; 2 நாளா. 5:2).

அதன்பின் சீயோன் என்ற பேர் தேவாலயம் இருந்த இடத்திற்கும், சில வேளைகளில் எருசலேம் முழுவதற்கும் கொடுக்கப்பட்டது (சங். 48:65:1; 102:21; ஏசாயா 2:3; ஏசாயா. 8:18). உதாரணமாக, மத். 21:4இல் "உன் இராஜா வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்றும், ரோமர் 11:26இல் "மீட்கிறவர் சீயோனிலிருந்து வருவார்" என்றும், 1 பேதுரு. 2:6இல் "மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்" என்றும், வெளி. 14:1இல் "சீயோன் மலைமேல் ஆட்டுக் குட்டியானவரைக் கண்டேன்" என்றும் குறித்துள்ளது.

« Prev 286 / 564 Next »