« Back to word list

சீமோன் (Simon)

(கேள்வி)

பழைய ஏற்பாட்டில் சிமியோன் எனப்பட்ட பெயர், பிற் காலத்தில் சீமோன் என வழங்கிற்று. யாக்கோபு பேதுருவை சிமியோன் என்று அழைத்திருக்கிறான் (அப். 15:14).

1. இயேசுவின் தலைமையான சீஷன் சீமோன். அவர் பேதுரு என்று பெயர் கொடுத்தார் (யோவான். 1:42).

2. கானானியனாகிய சீமோன் யூதருக்குள் ஒரு சுதேசக் கட்சியைச் சேர்ந்தவன். (மத். 10:4). கிரேக்க பாஷையிலே “செலோத்தே" எனப்பட்ட சீமோன் (லூக்கா. 6:15; அப். 1:13).

3. கர்த்தராகிய இயேசுவின் சகோதரரில் ஒருவன் (மத். 13:55;மாற்கு. 6:3).

4. பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்து சொஸ்தமடைந்த சீமோன், அவனுடைய வீட்டில், ஒரு ஸ்திரீ தைலத்தை இயேசுவின் சிரசின் மேல் ஊற்றினாள் (மத். 26:6; மாற்கு. 14:3; யோவான். 12:1-3).

5. இயேசுவின் சிலுவையை சுமக்கப் பலவந்தம் பண்ணப்பட்ட சிரேனே ஊரானாகிய சீமோன் (மத். 27:32; மாற்கு. 15:21; லூக்கா. 23:26).

6. பரிசேயனாகிய சீமோன், அவனுடைய வீட்டில் இயேசு பந்தியிருந்தபோது, பாவியான ஒரு ஸ்திரீ, இயேசுவின் பாதங்களில் பரிமளத் தைலத்தைப் பூசினாள் (லூக்கா. 7:36-40).

7. யூதாஸ்காரியோத்தின் தகப்பன் சீமோன் (யோவான். 6:71; 12:4; 13:2).

8. சமாரியாவிலிருந்த மாய வித்தைக்காரனாகிய சீமோன். இவன் பிலிப்புவின் பிரசங்கத்தால் குணப்பட்டு, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பணத்தால் சம்பாதிக்க நினைத்ததால், பேதுரு அவனைக் கண்டித்தான் (அப். 8:9-24).

9. யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன். அவனுடைய வீட்டில் பேதுரு தங்கியிருந்தான் (அப். 9:43).

« Prev 285 / 564 Next »