சீலோவாம் (Siloam)
(அனுப்புதல்)
எருசலேமிலுள்ள கெதரோன் பள்ளத்தாக்குக்கு மேற்பக்கத்தி லுள்ள ஒரு முக்கிய குளம். இங்கே மேற்குளம், கீழ்குளம் என்று இரண்டு குளங்கள் இருந்ததாகத் தெரிகிறது (ஏசாயா. 7:3; 22:9).
எசேக்கியாவின் நாள்களில், சனகெரிப் எருசலேமைக் கைப்பற்றப் போனபோது, எசேக்கியா நகரத்துக்குப் புறம்பேயுள்ள ஊற்றுகளைத் தூற்று, கீயோன் ஆற்றிலே அணைக் கட்டி அதன் தண்ணீரை மேற்கேயிருந்து தாவீதின் நகரத்துக்கு நேராகத்திருப்பினான் (2 இரா. 20:20; 2 நாளா.32:30).
கீழ்க் குளத்திற்குப் பழைய குளமென்றும், சீலோவாம் குளமென்றும், புதிய ஏற்பாட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இயேசு ஒரு பிறவிக் குருடனின் கண்களில் சேற்றைப் பூசி, சீலோவாம் குளத்தில் கழுவச் சொன்னார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம் (யோவான். 9:6,7).
லூக்கா. 13:4இல் குறித்திருக்கிற சீலோவாம் கோபுரம், இந்தக் குளத்திற்கு அருகே இருந்ததாக உத்தேசிக்கிறார்கள்.
சல்லூம் என்பவன் சீலோவாம் குளத்து மதிலைக்கட்டினான் (நெகே.3:15).
மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீரைப்பற்றி ஏசாயா 8:6இல் குறித்துள்ளது.