« Back to word list

சீஷாக் (Shishak)

இவன் எகிப்தின் இராஜா; கி.மு. 945-924 வரை அரசாண்டான். சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகை தேடினபோது, அவன் தப்பி எகிப்துக்குப் போய், சீஷாக்கிடம் தங்கி இருந்தான் (1இரா.11:29-40).

பின்பு ரெகொபெயாம் இராஜாவான ஐந்தாம் வருடத்தில் சீஷாக் வந்து, யூதாவைத் தோற்கடித்து, எருசலேமின் ஆலயத்தின் பொக்கிஷங்களையும் அரண்மனைப் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு போனான் (1 இரா. 14:25,26; 2 நாளா. 12:2-12).

« Prev 292 / 564 Next »