செமாயா, சேமாயா (Shemaiah)
("யேகோவா கேட்கிறார்")
1. இவன் ஒரு தீர்க்கதரிசி. ரெகொபெயாம் இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் செய்ய ஆயத்தமானபோது, இவன் அவனைத் தடுத்தான் (1 இரா. 12:22-24; 2 நாளா. 11:2-4).
எகிப்தின் இராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்தவேளையில் செமாயா ரெகொபெயாமை நோக்கி அந்நிய தேவர்களைச் சேவித்ததால் அது தேவ தண்டனையாக வந்தது என்றான் (2 நாளா. 12:5:9). இவன் ரெகொபெயாமின் நடபடிகளை ஒரு புத்தகத்தில் எழுதினான் (2 நாளா. 12:15).
2. தொபியாவும், சன்பல்லாத்தும் கூலிக்குப் பிடித்து,
நெகேமியாவிடம் அனுப்பின ஒரு கள்ளத் தீர்க்கதரிசி (நெகே. 6:10-14).
3. எரேமியா தீர்க்கதரிசியை எதிர்த்த ஒரு கள்ளத் தீர்க்கதரிசி. இவன் யோயாக்கீனோடு சிறைபிடிக்கப்பட்டான். இவனுடைய குடும்பம் முற்றாய் அழிந்து போகுமென்று, எரேமியா முன்னறிவித்திருந்தான் (எரே. 29:24-32).
4. ரூபன் கோத்திரத்து யோவேலின் குமாரன் (1 நாளா. 5:4).
5. நெதனெயேலின் குமாரன். தாவீதின் சம்பிரதி (1 நாளா. 24:6).
6. ஓபேத் ஏதோமின் குமாரன் (1 நாளா. 26:4).
7. யோசபாத்தின் நாள்களில் வேத புத்தகத்தில் இருந்து ஜனங்களுக்குப் போதித்தவன் (2 நாளா. 17:8).
8. எசேக்கியாவின் நாள்களில் காணிக்கைகளைப் பங்கிடும்படி ஏற்படுத்தப்பட்டவன் (2 நாளா. 31:15).
9. எருசலேமின் அலங்கத்தைக்கட்ட உதவிசெய்தவன் (நெகே. 3:29).
10. செருபாபேலோடு எருசலேமுக்கு வந்தவர்களில் ஒருவன் (நெகே.10:8).
11. லேவியரைக் கூட்டி வரும்படி எஸ்றாவால் அனுப்பப்பட்டவன் (எஸ்றா.8:16).
12. எருசலேமின் அலங்கப்பிரதிஷ்டையில் பங்கெடுத்த ஒரு பிரபு (நெகே. 12:34).