« Back to word list

செருபாபேல் (Zerubbabel)

(பாபிலோனியாவில் துளிர்த்தது)

செயல்தியேலின் குமாரன் (எஸ்றா. 3:2; ஆகாய். 1:1). சொரொபாபேல் என்று (மத். 1:12ல்) குறித்துள்ளது. இவனும் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவும் சிறையிலிருந்த யூதரை எருசலேமுக்குக் கூட்டிப்போனார்கள் (கி.மு. 536). இவன் பின்பு யூதாவின் தலைவனாக நியமிக்கப்பட்டான் (ஆகாய். 2:21),

இவன் தாவீதின் சந்ததியான் (1நாளா. 3:19). இது மேசியாவுக்குரிய உரிமை. செருபாபேலும் கர்த்தருடைய முத்திரை மோதிரமாக வைக்கப்படுவானென்று முன்னறிவிக்கப்பட்டது (ஆகாய்.2:23).

ஆலயத்தைக் கட்டி முடிக்கும்படி சகரியா, செருபாபேலை ஏவி எழுப்பிச் சொன்னதாவது : "கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையிலிருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது (சக. 4:10).

« Prev 302 / 564 Next »