சேபா (Sheba)
(உடன்படிக்கை)
இது பலஸ்தீனாவில் சிமியோன் கோத்திரத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பட்டணம் (யோசுவா. 19:2).
2. பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரன் சேபா. தாவீதுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினதினிமித்தம் யோவாப் அவனைப் பின் தொடர்ந்துபோகையில், ஆபேல் பட்டணத்தார் சேபாவைக் கொன்றார்கள் (2 சாமு. 20:1-22).
3. தென் அராபியாவிலுள்ள ஒரு தேசம். அந்தத் தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அதன் உண்மைகளை அறியும்படி அவனிடம் போய், மறை பொருளைக் கேட்டபோது, அவன் அவைகளை விடுவித்தான் (1 இரா. 10:1-7).
நமது ஆண்டவரும் இந்த ராஜஸ்திரீ செய்ததை மெச்சிப் பேசினார் (மத். 12:42).
4. காமின் சந்ததியான கூஷ் என்பவனின் மகன் (ஆதி. 10:7; 1 நாளா. 1:9).
5. ஆபிரகாம் கேத்தூராள் என்பவர்களின் மகனாகிய யக்ஷானின் மகன் (ஆதி. 25:3).