« Back to word list

சேம் (Shem)

இவன் நோவாவின் மூத்த மகன் (ஆதி. 5:32; 1 நாளா. 1:4). ஜலப்பிரளயத்தில் தப்பின எட்டு பேரில் ஒருவன் (ஆதி. 7:13).

நோவாவின் குடும்பத்தார் பேழைக்குள் போனவேளையில் சேம் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயும், விவாகம் செய்தவனாயுமிருந்தான். அவனுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை (ஆதி. 7:7).

பின்பு நோவா வெறித்திருந்த சமயத்தில் இவன் அவனை மரியாதையாய் நடத்தினதினிமித்தம் ஆசீர்வாதம் பெற்றான் (ஆதி. 9:23,27).

சேம் தலைப்பிள்ளையாயிருந்து, சேம் கோத்திரத்துக்கு முற்பிதாவானான் (ஆதி. 11:10-26). நமது ஆண்டவருக்கும் இவன் முற்பிதா (லூக்கா. 3:36).

சேமுடைய குமாரர்: ஏலாம், ஆசூர், அர்பக், லூத், ஆராம் என்பவர்கள். சேமிலிருந்து உண்டான ஜாதிகள் எல்லாவற்றிற்கும் இவர்கள் முற்பிதாக்களானார்கள் (ஆதி. 10:22). அர்பக்சாத் என்பவன் ஆபிரகாமுக்கும் அவன் மூலம் எபிரெய ஜாதியாரெல்லாருக்கும் முற்பிதா.

அர்பக்சாத் பிறந்தபின், சேம் 500 வருடம் உயிரோடு இருந்தான். அவன் 600-ஆம் வயதில் மரித்திருப்பான் (ஆதி. II:II).

« Prev 305 / 564 Next »