சேராபீம் (Seraphim)
இவர்கள் பரம பிராணிகள். இவர்கள் செட்டைகளை விரித்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஆண்டவருக்கு மேலாக நிற்கிறதாக ஏசாயா சொல்லுகிறான்.
அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளும், கைகளும், கால்களும் இருந்தன.
அவர்களில் ஒரு வரிசை மற்ற வரிசையோடு மறுமொழியாக "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்” என்று பாடி, பூமியனைத்தும் அவர் மகிமையால் நிறைந்திருக்கிறதென்று சொன்னார்கள் (ஏசாயா.6:2-7).
இவர்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் சம்பந்த முள்ளவர்களெனத் தெரிகிறது (ஏசாயா. 6:6).