« Back to word list

சோவான் (Zoan)

இது எகிப்திலுள்ள ஒரு பூர்வீக பட்டணம். எபிரோன் பட்டணம் நிலை பெற்ற காலத்தில், இதுவும் கட்டப்பட்டதாகத் தெரிகிறது (எண். 13:22). கிரேக்கர் இதை "ரியூனிஸ்" என்றழைத்தனர். இது நைல் நதியைச் சேர்ந்த ஒரு முக்கிய துறைமுகம்.

எகிப்தின் கடைசி இராஜாவாகிய இரண்டாம் ராமசேஸ் (Ramases) என்பவர்களின் நாள்களில் இது அதிக செழிப்பாய் இருந்தது. அவன் இங்கே அநேகக் கட்டடங்களையெழுப்பி, தனக்கும் ஒரு அரண்மனையைக் கட்டினான். மேலும் ஒரு பெரிய கோயிலைக் கட்டி தன்னுடைய சுரூபத்தை அதற்குள் வைத்தான்.

ஏசாயா, எசேக்கியேல் என்பவர்களின் காலத்திலும் இது இருந்தது (ஏசாயா. 19:11; எசே. 30:14).

எகிப்தியர் மேல் விழுந்த வாதைகளெல்லாம் சோவானிலே நடந்தது (சங். 78:12, 43). (Zoan)

இது எகிப்திலுள்ள ஒரு பூர்வீக பட்டணம். எபிரோன் பட்டணம் நிலை பெற்ற காலத்தில், இதுவும் கட்டப்பட்டதாகத் தெரிகிறது (எண். 13:22). கிரேக்கர் இதை "ரியூனிஸ்" என்றழைத்தனர். இது நைல் நதியைச் சேர்ந்த ஒரு முக்கிய துறைமுகம்.

எகிப்தின் கடைசி இராஜாவாகிய இரண்டாம் ராமசேஸ் (Ramases) என்பவர்களின் நாள்களில் இது அதிக செழிப்பாய் இருந்தது. அவன் இங்கே அநேகக் கட்டடங்களையெழுப்பி, தனக்கும் ஒரு அரண்மனையைக் கட்டினான். மேலும் ஒரு பெரிய கோயிலைக் கட்டி தன்னுடைய சுரூபத்தை அதற்குள் வைத்தான்.

ஏசாயா, எசேக்கியேல் என்பவர்களின் காலத்திலும் இது இருந்தது (ஏசாயா. 19:11; எசே. 30:14).

எகிப்தியர் மேல் விழுந்த வாதைகளெல்லாம் சோவானிலே நடந்தது (சங். 78:12, 43).

« Prev 310 / 564 Next »