« Back to word list

சோவார் (Zoar)

(சிறியது)

இது சித்தீம் சம பூமியிலுள்ள ஐந்து பட்டணங்களில் ஒன்று. இதன் முதற் பெயர் பேலர். இதன் இராஜா சோவார். கெதர்லா கோமேர் தோற்கடித்த ஐந்து இராஜாக்களில் ஒருவன் (ஆதி. 14:2-8). தேவ தீர்ப்பு அந்தப் பட்டணங்கள் மேல் வந்தபோது, லோகாத்தின் வேண்டுதலின்படி இந்தப் பட்டணம் தப்பிற்று (ஆதி.19:20-23). ஏசாயா, எரேமியா என்பவர்களின் நாள்களிலும் இந்தப் பட்டணம் இருந்தது. அவர்கள் இந்தப் பட்டணம் மோவாப் தேசத்தின் ஒரு பகுதியென குறிக்கிறார்கள் (ஏசாயா. 15:5; எரே. 48:24),

« Prev 311 / 564 Next »