« Back to word list

தாகோன் (Dagon)

(மீன்)

பெலிஸ்தருடைய முக்கிய தெய்வம். இந்தச் சொரூபத்தின் தலையும், கரங்களும், உடலும் மனுஷ ரூபமுள்ளவை. தாகோன் செழிப்பு கொடுக்கும் தெய்வமாக மதிக்கப்பட்டது. இதன் முக்கிய கோயில்கள் காசாவிலும், அஸ்தோத்திலும் இருந்தன.

பெலிஸ்தர் சிம்சோனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, காசாவுக்குக் கொண்டு போய், சிறைச்சாலையில் வைத்தார்கள். பின்பு தங்கள் தேவனாகிய தாகோனுக்குப் பலி செலுத்தக்கூடி வந்த வேளையில், வேடிக்கை காட்டும்படி சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது சிம்சோன் அவர்கள் இருந்த வீட்டின் தூண்களை பலமாய் சாய்த்தபோது, அது விழுந்து, ஜனங்கள் எல்லாரும் கொல்லப்பட்டார்கள் (நியா. 16:21-30).

பெலிஸ்தருக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் நடந்த யுத்தத்தில், பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து அஸ்தோத்திற்குக் கொண்டு போய் தாகோன் அண்டையில் வைத்தார்கள். மறுநாள், தாகோன் கர்த்தருடைய பெட்டிக்குமுன் முகங்குப்புற விழுந்து கிடந்தது (1 சாமு. 5:1-6).

« Prev 319 / 564 Next »