தர்ஷீஸ் (Tarshish)
(கடினமான)
வேதாகமத்தில் தர்ஷீஸ் என்ற சொல் ஆள்களையும்.
இடங்களையும் குறிக்கிறது.
ஆள்களின் பெயர்கள் :
1. பென்யமீன் கோத்திரத்துப் பில்கானின் மகன் (1 நாளா. 7:10).
2. பெர்சியா இராஜாவாகிய அகாஸ்வேருவின் ஏழு அதிபதிகளில் ஒருவன். இவர்களுக்கு இராஜ சமுகத்தைத் தரிசிக்கும் அதிகாரம் உண்டு (எஸ். 1:13).
3. நோவாவின் பேரனாகிய யாவானின் குமாரன் (ஆதி.10:4; 1நாளா.1:7).
இடங்களின் பெயர்கள் :
1. தர்ஷீஸ் பட்டணம் என்பது பழைய ஏற்பாட்டில் பல தடவைகளில் சொல்லப்பட்டும், எங்கேயிருந்ததென்றும் திட்டமாய்க் குறிக்கப்படவில்லை. பலஸ்தீனா தேசத்திலிருந்து அதிகத் தூரத்தில் மத்திய தரைக்கடலருகே இருந்ததாகத் தெரிகிறது (யோனா. 1:3; ஏசாயா. 66:19),
இந்த இடத்திலிருந்து பெனிக்கேயர் வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் முதலியவைகளை இறக்குமதி செய்தார்கள் (எசே. 27:12).
தர்ஷீஸ் கப்பல்கள் என்பது (1 இரா. 10:22; சங். 48:7) தர்ஷீசுக்கு போக்குவரத்தாயிருந்த பெரிய வியாபாரக்கப்பல்களைக் குறிக்கிறது. பின்பு இந்தப் பெயர் பொதுவாக ஓப்பீர் முதலிய தூர தேசங்களுக்குப் போய் வியாபாரம் செய்த கப்பல்களுக்கு உபயோகிக்கப்பட்டது.
சாலொமோனுக்கும் சிவந்த சமுத்திரத்தில் எசியோன், கேபார் என்னும் துறைமுகத்தில் இப்படிப்பட்ட பெரிய கப்பல்கள் இருந்தன. கர்த்தருடைய நாளில் நியாயத்தீர்ப்பு தர்ஷீஸின் கப்பல்கள் மேலும் விழும் என்று ஏசாயா. 2:16இல் குறித்துள்ளது.