திர்ஷாதா (Tirshatha)
இது பெர்சிய இராஜாங்கத்துக்கடுத்த ஒரு பட்டப்பெயர். "மாட்சிமையுள்ளவன்” (His Excellency) என்ற கருத்துள்ளது. செருபாபேலும், நெகேமியாவும் யூதேயாவில் தேசாதிபதிகளாயிருக்கையில், இந்தப் பெயர் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது (எஸ்றா. 2:63; நெகே. 8:9).