« Back to word list

துரோவா (Troas)

சின்ன ஆசியாவிலுள்ள ஒரு துறைமுகப் பட்டணம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த துரோய் (Troy) என்ற பட்டணத்தி லிருந்து இப்பெயர் வந்தது.

பவுலும், சீலாவும் பிரயாணப்பட்டு, துரோவாவுக்கு வந்த போது, மக்கெதோனியா தேசத்தானொருவன், மக்கெதோனியாவுக்கு வந்து தங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டதாகப் பவுல் தரிசனம் கண்டான் (அப். 16:8-10; 2 கொரி. 2:12,13).

பின்பு பவுல் எருசலேமுக்குப் போகிற வழியில் துரோவாவில் ஏழு நாள் தங்கினான். அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடி வந்த வேளையில், பவுல் நடுராத்திரி வரை பிரசங்கிக்கையில் ஐத்திகு என்னும் ஒரு வாலிபன், மேல் வீட்டிலிருந்து விழுந்து மரித்த போது, பவுல் ஜெபித்து, அவனுக்குத் திரும்ப உயிர்வரச் செய்தான் (அப். 20:6-12).

இவ்விடத்திலிருந்த கார்ப்பு என்பவனிடம் பவுல் ஒருமுறை தனக்குரிய பொருள்களை வைத்திருந்தான் (2 தீமோ. 4:13),

« Prev 333 / 564 Next »