« Back to word list

தெக்கப்போலி (Decapolis)

(பத்துப் பட்டணங்கள்)

இந்தப் பெயர் கலிலேயாக் கடலின் தெற்கேயுள்ள தேசத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பத்துப் பட்டணங்களில் ஒன்றுகூடி, தங்கள் பாதுகாப்புக்காகவும், வேறு நன்மைகளுக்காகவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். பத்துப் பட்டணங்களாவன: தமஸ்கு, ஜனங்கள் பிலதெல்பியா, கெதரா, சைதோபொலிஸ், பெல்லா, கெரர்சா, இப்போஸ், தியோன், கணத்தா, ரப்பானா, இத்தேசத்து ஜனங்களும் வந்து இயேசுவுக்குப் பின் சென்றார்கள் (மத். 4:25).

இயேசு சீதோனிலிருந்துத் திரும்பவும் அங்கே போனார் (மாற்கு. 7:31). அந்தக் காலத்தில் இது ஒரு பெயர் பெற்ற தேசமாயிருந்தது.

லேகியோனாகிய பிசாசுகள் பிடித்தவன் இயேசுவினால் சொஸ்தமாக்கப்பட்டபின் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணினான் (மாற்கு. 5:20).

« Prev 334 / 564 Next »