தேராபீம் (Teraphim)
இந்தப் பதம் தமிழ் வேதாகமத்தில் ஓசியா 3:4இல் மாத்திரம் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் நியா. 17:5; 18:14-லும் காணப்படுகிறது. மற்ற இடங்களிலெல்லாம் "சொரூபங்கள்" என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது.
இவைகள், அஞ்ஞானிகளின் வீடுகளில் வைத்திருந்த மனுஷரூபமுள்ள தெய்வங்கள். பாதுகாவலரென்றும், அதிர்ஷ்டம்
கொடுப்பவர்களென்றும் எண்ணப்பட்டன. இவைகளில் சில ஒட்டகச் சேணத்தின் கீழ் ஒளித்து வைக்கத்தக்க சிறியதாக இருந்தன (ஆதி. 31:34). வேறு சில மனுஷ அளவாயிருந்தன (1 சாமு. 19:13).
மேலும் இப்படிப்பட்ட சுரூபம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவனிடமிருந்தால் பெற்றோருடைய சொத்து அவனுக்குக் கிடைக்க வேண்டுமென்ற ஒழுங்கு ஆதிகாலத்தில் இருந்தது. லாபான் தன் சுரூபத்தை யாக்கோபினிடமிருந்து எடுத்துக் கொள்ளக் கூடாமற்போனபோது, அவனோடு பொருத்தனை பண்ணியதற்குக் காரணம் இதுவே (ஆதி. 31:19).
இந்தச் சுரூபங்கள், அஞ்ஞான வணக்கத்துக்குரியன (நியா. 17:5; ஓசியா. 3:4). இதினிமித்தம் ஓசியா இராஜா, மார்க்க சீர்த்திருத்தம் செய்தபோது இவைகளை நிர்மூலமாக்கினான் (2 இரா. 23:24).
சிறையிருப்பின் பின் இவைகள் மறுபடியும் வணங்கப்பட்டன (சக. 10:2)