தோப்பேத் (Topheth)
(வெறுப்பான இடம்)
இது எருசலேமுக்குப் புறம்பே இருந்த இன்னோம் பள்ளத்தாக்கி ஒரு பகுதி. ஆபகாஸ், மனாசே என்பவர்களின் நாள்களில் யூதா புத்தி இங்கே மேடைகளைக் கட்டி, தங்கள் குமாரரையும், குமாரத்திகளையு: அக்கினியிலே தகனித்தார்கள். ஆதலால், "இதோ நாட்கள் வரும். அப்பொழுது அது சங்காரப் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படும். தோப்பேத்தில் இடம் கிடையாமற் போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்" என்று எரேமியா கூறுகிறான் (எரே. 7:31, 32;19:6). ஒருவனும் தன் பிள்ளைகளைத் தீ கடக்கப்பண்ணாதபடி யோசியா, தோப்பேத் என்னும் ஸ்தலத்தை தீட்டாக்கினான் (2 இரா. 23:10). பிற்பாடு நகரத்தின் குப்பை கூளங்களைப்போட்டு எரித்ததினிமித்தம் இந்த இடம் கெகென்னா (Gehenna) என்று பெயர் பெற்றது.