« Back to word list

தோமா (Thomas)

பன்னிரு அப்போஸ்தலரில் ஒருவன் (மத். 10:3). இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் என்று அர்த்தமுள்ள திதிமு (யோவான் 21:2). இவன் ஐயப்படுகிற குணமுள்ளவன் (யோவான். 20:4). மரித்த லாசருவிடம் யூதேயாவுக்குப் போகும்படி இயேசு சீஷரை அழைத்த வேளையில், "வாருங்கள் நாமும் அவரோடே மரிக்கும்படி போவோம்" என்றதில் இவனுடைய மற்றொரு தன்மையும் வெளியாகிறது (யோவான். 11:16). கர்த்தர் உயிர்த்தெழுந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது, அவரைத் தொட்டுப் பார்த்தாலொழிய, விசுவாசிக்க மாட்டேனென்று சொன்னவனும் இவனே (யோவான். 20:25). உயிர்த்தெழுந்தபின், இயேசு தம்மைத் தொட்டுப் பார்க்கும்படி, தோமாவுக்குச் சொன்னபோது, “என் ஆண்டவரே, என் தேவனே" என்றான். அதற்கு இயேசு காணாதிருந்தும் விசுவாசிக்கிறவன் பாக்கியவான் என்றார் (யோவான்.20:27-29).

பிற்காலங்களில் இவன் "ஐயப்படும் தோமா" எனப்பெயர் பெற்றான்.

« Prev 348 / 564 Next »