« Back to word list

நசரேயன் (Nazarene)

1. நாசரேத் ஊரில் பிறந்தவனை நசரேயன் என்று சொல்லுவது வழக்கம். இயேசுவும் நாசரேத் ஊரில் வளர்ந்தபடியால், இப்பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது (மத். 2:23; அப். 24:5). "நசரேயனாகிய இயேசு" என்று பின்வரும் தருணங்களில் அழைக்கப்பட்டார்.

பிசாசு பிடித்தவன் (மாற்கு. 1:24; லூக்கா. 4:34). ஜனங்கள் (மாற்கு. 10:47; லூக்கா. 18:37). ஒரு வேலைக்காரி (மாற்கு. 14:67 மத். 26:71). கல்லறையிலே ஸ்திரீகளுக்குக் காணப்பட்ட தூதன் (மாற்கு. 16:6). எம்மாவுக்குப் போன சீஷர் (லூக்கா. 24:19). இயேசுவைப் பிடிக்கப்போன சேவகர் (யோவான் 18:5). சிலுவை மேலிருந்த மேல் விலாசம் (யோவான் 19:19). பேதுரு நசரேயனாகிய இயேசு என்று சொன்னான் (அப். 2:22; 3:6; 4:10). ஸ்தேவானில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு (அப். 6:14). இயேசு தாமே பவுலுக்குச் சொன்ன வார்த்தை (அப். 22:8). பவுல் இயேசுவைப் பற்றி சொன்னது (அப். 26:9).

புதிய ஏற்பாட்டில் "நசரேயன்" என்பது பொதுவாய் இயேசுவைக் குறித்துள்ளது.

பிற்பாடு, பவுல் நசரேய மதபேதத்துக்கு முதலாளி எனப்பட்டான் (அப். 24:5)

இயேசு "நசரேயன்" எனப்படுவாரென்று தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது (மத். 2:23). இது வேதாகமத்தில் குறிப்பாகச் சொல்லியுள்ளதல்ல. தீர்க்கதரிசிகள் பொதுவாய் இயேசுவைப் பற்றிச் சொன்னவைகளிலிருந்து மத்தேயு தன்னுடைய வசனிப்பாகச் சொல்லியிருப்பான்.

இயேசு “வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போல் எழும்புகிறார்" என்று குறித்துள்ளது (ஏசாயா. 53:2).

நசரேயன் (Nazarite)

கர்த்தருக்கென்று நசரேய விரத பொருத்தம் பண்ணுகிறவன் நசரேயன் எனப்படுவான். புருஷனாவது, ஸ்திரீயாவது இந்தப் பொருத்தனைக்குட்படலாம். இதற்குட்பட்டவன் திராட்சரசம் மதுபானம் என்றவற்றை விலக்க வேண்டும். பிரேதத்தண்டையில் போகவும் அசுத்தமான ஆகாரங்கள் புசிக்கவும், சவரகன் கத்தி தலையின்மேல் படவும் கூடாது. அவன் தீட்டுப்படாமல் கர்த்தருக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

அவன் தீட்டுப் படாமல், பலி செலுத்தித் தீட்டை நிவிர்த்தி செய்ய முறைகளிருந்தன. சிம்சோன், யோவான் ஸ்நானன் ஆகியவர்கள் பிறக்கும் முன்னே தேவனுடைய சொற்படி இந்தப் பிரதிஷ்டைக்குட்படுத்தப்பட்டார்கள்.

ஆகிலும் ஒருவன் தேவ ஊழியம் செய்வதற்காக அல்லது மார்க்க அப்பியாசங்களுக்காகத் தன்னைத்தானே உலக ஜீவியத்திலிருந்து பிரித்து இவ்விதப் பிரதிஷ்டை செய்வதுமுண்டு. அப்படிச் செய்பவர்கள் வெளியான காரியங்களில் மாத்திரமல்ல, உள்ளான ஆவிக்குரிய ஜீவியம் செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இந்த விரதம் செய்வோருக்கு விசேஷ ஆசீர்வாதமுண்டென்று நம்பப்படுகிறது.

« Prev 351 / 564 Next »