« Back to word list

நகோமி (Naomi)

(இன்பமான)

எலிமெலேக்கின் மனைவி. மக்லோன், கிலியோன் என்பவர்களின் தாய்.

நியாயாதிபதிகளின் நாள்களில், பெத்லகேமில் பஞ்சம் உண்டானதினிமித்தம், அவ்வூரானாகிய எலிமெலேக்கு தன் குடும்பத்தோடு மோவாப் தேசத்துக்குப் போனான். அங்கே அவன் மரித்தான். அவனுடைய குமாரரும், அவ்வூர் பெண்களை விவாகம் செய்தபின் மரித்தார்கள். பின் நகோமி, யூதா தேசத்துக்குத் திரும்பிப் போகையில் அவளுடைய மருமக்களில் ஒருத்தியான ரூத்தும் கூடப்போனாள்.

அவர்கள் பெத்லகேமுக்கு வந்தபோது அவ்வூரார் தன்னை நகோமி என்று சொல்லாமல், கசப்பு என்ற கருத்துள்ள மாராள் என்று சொல்லும்படி சொன்னாள். பின் அவளுடைய உறவின் முறையான போவாஸ் என்னும் ஆஸ்திக்காரன், ரூத்தை விவாகம் செய்தான். அவர்களுக்கு ஓபேத் என்னும் பிள்ளை பிறந்தது. நகோமி அவனைத் தன் பிள்ளைபோல் எடுத்து வளர்த்தாள். அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன் (ரூத். 4:17).

« Prev 350 / 564 Next »