« Back to word list

நாகூம் (Nahum)

(இரக்கமுள்ள)

சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவன். 'எல்கோஷியன்' எனப்படுகிறான் (நாகூம் 1:1). எல்கோஷ் பலஸ்தீனாவிலுள்ள ஒரு ஊர்.

நினிவேக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைத்தான். யோனாவின் பிரசங்கத்தினால் நினிவேயின் ஜனங்கள் மனந்திரும்பினார்கள். ஆனால் அது நிலைநிற்கவில்லை. அதன்பின் ஏறக்குறைய வருடங்களுக்குப்பின் நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்தான். இவனுடைய தூது நினிவேயின் அழிவைப் பற்றியது. 150

அந்நாள்களில் இஸ்ரவேலரும் அசீரியரால் ஒடுக்கப்பட்டார்கள் நாகூம் அவர்களைத் தைரியப்படுத்திச் சொன்னதாவது :

கர்த்தர் நீடிய சாந்தமுள்ளவர். எவரையும் தண்டியாமல் விடார் (நாகூம் 1:3). தம்மை நம்புகிறவர்களைக் காப்பாற்றுவார் (நாகூம் 1:7). இப்போதும் உன் மேலிருக்கிற அசீரியனின் நுகத்தை முறிப்பேன் (நாகூம் 1:13). நற்செய்தியைக் கூறுகிறவனின் கால்கள் மலைகளில் நடந்து வருகிறது (நாகூம் 1:15).

நினிவேக்கு, நாகூம், தேவ தண்டனையையே கூறுகிறான். இதோ! நான் உனக்கு விரோதமாக வந்து இரதங்களை எரித்துப்போடுவேன் (நாகூம். 2:13).

அசீரியாவின் வீழ்ச்சி நூறு வருடத்தில் சம்பவித்தது. (கி.மு. 606).

யேகோவாவின் பரிசுத்தம் பாவத்தைத் தண்டியாமல் விடாது என்பதே நாகூமின் தூதின் பொருள்.

அசீரியர், இஸ்ரவேலை நிந்தித்த காலமுண்டு. ஆனாலும் இஸ்ரவேலின் தேவன் இராஜ்யங்களின் அதிகாரத்தை மாற்ற வல்லவரென்று இந்தப் புத்தகம் காட்டுகிறது.

தற்காலத்திலும் இஸ்ரவேலின் தேவன் தமது ஜனத்தை விரோதிகளின் கையிலிருந்து விடுவிப்பாராக.

« Prev 355 / 564 Next »