« Back to word list

நாகோர் (Nahor)

1. ஆபிராமுடைய பாட்டன் (ஆதி. 11:22-25). இயேசுவின் முற்பிதா (லூக்கா.3:34).

2.ஆபிராமுடைய சகோதரன், நாகோர் (ஆதி. 11.27). இவன் தன் சகோதரனாகிய ஆரானின் மகள் மில்காளை விவாகம் செய்தான் (ஆதி.11:29).நாகோர் லாபானுடைய தகப்பன் (ஆதி. 29:5). ரெபெக்காளின் பாட்டன் (ஆதி. 24:15).

மெசொப்பொத்தாமியாவிலிருந்த ஆரான் "நாகோருடைய" ஊர் எனப்பட்டது (ஆதி. 24:10). ஆபிராமும் லோத்தும் கானானுக்குப் புறப்பட்டுப் போனபோது இவன் ஆரானில் இருந்து விட்டான்.

நாகோர் யேகோவாவைச் சேவித்தும் வேறே தேவர்களையும் சேவித்தான் (ஆதி. 31:53; யோசு. 24:2).

« Prev 356 / 564 Next »