« Back to word list

நாசரேத் (Nazareth)

(தளிர்)

இது கலிலேயாவிலுள்ள ஒரு பட்டணம். கர்மேல் மலையிலிருந்து தென்கிழக்கில் 15 மைலுக்கு அப்பாலிருந்தது. இயேசுவின் பெற்றோர் இருந்த ஊர். அவருடைய பிறப்பைப் பற்றி தேவ தூதன் அறிவித்த இடம்.

எகிப்திலிருந்து திரும்பிவந்து, இயேசுவின் பெற்றோர் இங்கே வாசம் பண்ணினார்கள் (மத். 2:23; லூக்கா. 1:26-31). இயேசு இங்கே 28 வருடம் தங்கியிருந்தபடியால் நசரேயன் எனப்பட்டார் (மத். 2:23). அவர் "வளர்ந்த ஊர்" என்றும் குறித்துள்ளது (லூக்கா. 4:16).

அக்காலத்தில் நாசரேத்து எருசலேமின் ஜனங்களால் மாத்திர மல்ல, சுற்றி இருந்த ஊராராலும் இகழப்பட்ட ஊராயிருந்தது. இதுவே நாத்தான்வேலின் கேள்விக்குக் காரணமாயிருந்திருக்கலாம் (யோவான் 1:46).

« Prev 357 / 564 Next »